தலைப்புச் செய்திகள்

நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பில், சிஐடியில் ஜனாதிபதியின் செயலாளர் முறைப்பாடு

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை குறித்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவில் (சிஐடி’), ஜனாதிபதியின் செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் இன்று (11) இந்த முறைப்பாட்டைச் செய்தார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2009ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு, இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஜனாதிபதியின் செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.