
மோதல் நடந்த சில இடங்களில், போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன என்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் செரீப் தெரிவித்துள்ளார்.
இது அமைதிப் பேச்சுவார்த்தையின் நோக்கத்தையே சீர்குலைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அவரின் X தளத்தில் இது குறித்து பதிவொன்றை எழுதியுள்ள அவர்; அனைத்துத் தரப்பினரும், ஒப்புக்கொள்ளப்பட்டபடி, இரண்டு வாரங்களுக்கு நிதானத்தைக் கடைப்பிடித்து போர்நிறுத்தத்தை மதிக்க வேண்டும் என்று நான் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் கேட்டுக்கொள்கிறேன் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போதுதான், இந்த மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதில் ராஜதந்திரம் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் எந்தப் பகுதிகளில் இவ்வாறான மீறல்கள் நடந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்புகளுக்கிடையில் இரண்டுவார போர் நிறுத்தம் எட்டப்படுவதற்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


