தலைப்புச் செய்திகள்

ஈரானின் முழு நாகரீகமும் இன்று இரவு அழிந்து விடும்: ட்ரம்ப் அச்சுறுத்தல்

ஈரானின் முழு நாகரிகமும் இன்று இரவு அழிந்துவிடும், இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது’ என்று, ஈரானை தாக்குவதற்கான எதிர்வுகூறலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ளார்.

அவருடை ரூத் சமூகத்தளத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது நடக்க சந்தர்ப்பமுள்ளது. இருப்பினும், இப்போது முழுமையான மற்றும் மொத்தமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மாறுபட்ட, புத்திசாலித்தனமான, மற்றும் தீவிரவாதம் குறைந்த சிந்தனையாளர்கள் மேலோங்கி இருக்கிறார்கள். ஒருவேளை புரட்சிகரமான அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?’ எனவும் அந்தப் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

‘உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்று இரவு நாம் அதைக் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும்’ என அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு நேற்று திங்கட்கிழமை வரை – ஈரானுக்கு ட்ரம்ப் காலவரையறை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.