தலைப்புச் செய்திகள்

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்; முடிவு, மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவிப்பு

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் ‘தி டெலிகிராஃப்’ ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், நேட்டோவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

“ஆம், இது மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்டது என்று நான் கூறுவேன்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்பட்டதில்லை. அவர்கள் ஒரு காகிதப் புலி என்பது எனக்கு எப்போதுமே தெரியும், சொல்லப்போனால் புட்டினுக்கும் அது தெரியும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

போருக்கு ஆதரவளிக்காததற்காக நேட்டோ நட்பு நாடுகளை டிரம்ப் தொடர்ந்து கடுமையாகச் சாடி வருகிறார். ஹோர்முஸ் நீரிணைக்கு ராணுவத்தை நேட்டோ நாடுகள் அனுப்ப மறுத்ததற்காக அவர்களை “கோழைகள்” என்று ட்ரம்ப் அழைத்தார்.

இந்த நிலையில், தி டெலிகிராஃப்’ ஊடகத்திலும், அதே விடயததை அவர் மீண்டும் கூறியுள்ளார். ஆதரவு “தானாகவே வழங்கப்பட வேண்டும்” என்று கூறி, ஈரான் மீதான போரையும் – ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரையும் ஒப்பிடுவது போல் அவர் பேசியுள்ளார்.

“உக்ரைன் உட்பட, நாங்கள் தானாகவே அங்கு இருந்தோம். உக்ரைன் எங்கள் பிரச்சனை அல்ல” என்று கூறிய அவர்; “அது ஒரு சோதனை, நாங்கள் அவர்களுக்காக அங்கு இருந்தோம், நாங்கள் எப்போதும் அவர்களுக்காக இருந்திருக்கிறோம். அவர்கள் எங்களுக்காக இருக்கவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.