தலைப்புச் செய்திகள்

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் தெற்கில் சிக்கிய படகு: 06 சந்தேக நபர்களும் கைதாகினர்

லங்கையின் தென்மேற்குக் கடற்கரையில் நேற்று (31) கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் ஹெரோயின் பொதியொன்று கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அந்தப் படகு இன்று சோதனை நடவடிக்கைகக்கா திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் கூறினார்.

மேலும், 6.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, ஏறத்தாழ 300 கிலோ ஹெரோயின் அடங்கிய 298 பொட்டலங்கள் அந்தப் படகில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஆய்வைத் தொடர்ந்து, சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.