தலைப்புச் செய்திகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவரை – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

நடந்து வரும் விசாரணைகளில் பிரசாத் ரணசிங்க தலையிட்டார் அல்லது தடுத்தார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.