தலைப்புச் செய்திகள்

போரை முடிப்பேன் என்றவர், 20 மடங்கு கடுமையாக அடிப்பேன் என்கிறார்: சில மணி நேரத்துக்குள் ‘கரணமடித்தார்’ ‘ட்ரம்ப்

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் திங்களன்று ஒருவர் உயிரிழப்பு, இருவருக்க காயம்

ஈரானின் ஏவுகணைத் திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளதை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அதன் நிராகரித்துள்ளது.

தாம் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை நிலைநிறுத்தி வருவதாகவும், அவற்றில் ஒரு டொன்னுக்கு மேல் எடையுள்ள வெடி மருந்துகளைக் கொண்டு செல்லும் ஏவுகணைகளும் அடங்குவதாகவும் காவல் படை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், ஈரானை 20 மடங்கு கடுமையாகுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா உட்பட, மத்திய கிழக்கிலுள்ள – இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சொத்துக்கள் மீது, ஈரான் தனது எதிர் தாக்குதல்களைத் தொடர்கிறது.

இதேவேளை ஈரான் தலைநகர் தெஹ்ரான் ஒரே இரவில் போரின் மிகவும் கடுமையான குண்டுவீச்சுகளில் சிலவற்றை எதிர்கொண்டதாக, அல் ஜசீரா கூறியுள்ளது. இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 486 பேரைத் தாண்டியுள்ளது.

ஈரான் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 191 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இல்ரேலில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்தனர்.