
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் தற்போது கிட்டத்தட்ட 32,000 உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையை உள்ளது என, எதிர்கொள்கிறது என, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட கைரேகை அதிகாரிகள், குற்ற பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காக இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டபோது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த ஆண்டு 2,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற உள்ளனர் என்றும், அடுத்த ஆண்டு மேலும் 2,700 உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.


