தலைப்புச் செய்திகள்

அங்கீகாரம் பெறத் தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2026 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு – விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கட்சிச் செயலாளர் கையொப்பமிடப்பட்ட – தேவையான ஆவணங்களுடன், ஜனவரி 28 முதல் பெப்ரவரி 28, வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் செயலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் – வர்த்தமானி அறிவிப்புகளின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைக் குறிப்பிட வேண்டும்.

துணை ஆவணங்களில் – கட்சி அரசியலமைப்பு, அலுவலக பொறுப்பாளர் பட்டியல், கடந்த நான்கு ஆண்டுகளில் பெண் நிர்வாகிகள், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், தற்போதைய கொள்கை அறிக்கை மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து செயல்பட்டதற்கான சான்று ஆகியவை அடங்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 28 அன்று பிற்பகல் 3:00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ‘அரசியல் கட்சி அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் – 2026’ என்று குறிப்பிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.