தலைப்புச் செய்திகள்

500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்

முன்மொழியப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு (supplementary allocation) காரணமாக, ஏப்ரல் 2026 க்குள், நாடு வங்குரோத்து அடைவதற்கு வழி வகுக்கும் எனக் கூறுப்படுவதை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் வலுவான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான நிதி இலக்குகளையும் பேணி வருவதாகவும், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது கூறினார்.

“நீண்ட காலமாக, திறைசேரிக் கணக்கு – மேலதிகப் பற்றாக இருந்தது. 2018 இல், இது ரூ. 180 பில்லியனாகவும், 2019 இல் ரூ. 244 பில்லியனாகவும், 2020 இல் ரூ. 575 பில்லியனாகவும், 2021 இல் ரூ. 821 பில்லியனாகவும் உயர்ந்தது.

“ஆனால், நொவம்பர் 2025 இல், எங்கள் அரசாங்கத்தின் கீழ், திறைசேரிக் கணக்கு ரூ. 1,202 பில்லியனின் நேர்மறையான இருப்பைக் காட்டியது. இது ரூ. 02 டிரில்லியன் முன்னேற்றமாகும்“ என்று அவர் கூறினார்.

இந்த நிதி நிலை, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் இல்லாமல் மேலதிக நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் தாக்கல் செய்ய உதவுகிறது என்று அவர் மேலும் கூறினார்.