தலைப்புச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரணத் தொகையைப் பெறுவதற்குரிய 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) தெரிவித்தார்.

அந்த வகையில், இதற்கென ஒருக்கப்பட்ட 17.6 பில்லியன் ரூபாயில், இதுவரை 6.4 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சூறாவளியால் 610,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில், 493,000 குடும்பங்கள் ரூ.25,000 முதற்கட்ட மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

எனவே, அனைத்து கொடுப்பனவுகளையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.