
கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்டின் (Continental Insurance Lanka Limited) முன்னாள் பிரதித் தலைவர் கணேராச்சிகே தேசங்கர் சமிந்த டி சில்வாவை, நேற்று செவ்வாய்க்கிழமை (09) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுஅதிகாரிகள் கைது செய்தனர்.
லஞ்சக் குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி டி.எச்.எல்.டபிள்யூ. ஜெயமண்ணவுக்கு, 6,415,050 ரூபாய் லஞ்சம் கொடுக்க உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பணம் தனியார் காப்புறுதி நிறுவனத்திற்கு தேவையற்ற நன்மையை அளித்ததாகவும், சமிந்த டி சில்வா குற்றத்துக்கு ஆதரவாக செயற்பட்டதாவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


