தலைப்புச் செய்திகள்

பதில் பிரதம நீதியரசராக அந்தனி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

உச்ச நீதிமன்ற நீதியரசர் அந்தனி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.