
நீரில் மூழ்கி 230 பேர் இந்த வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொடையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்று (06) பிற்பகல் தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தபோது 10 பேர் பொழுதுபோக்குக்காக, அங்கு சென்றிருந்தனர் எனக்கூறப்படுகிறது.
இதன்போது, நீரில் மூழ்கிய மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிலாபம் பொலிஸார், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு, கடற்படை மற்றும் உள்ளூர் மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.



