தலைப்புச் செய்திகள்

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சந்தேக நபர்கள் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச சபைத் தவிசாளரின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழுவினர், சந்தேக நபர்களை கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலையில் சந்தேக நபர்களின் தொடர்பு இருப்பதைக் கண்டறியவும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணவும், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.