
பெண்கள் 425 பேர் இந்த ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய போது, இந்த விவரங்களை அவர் கூறினார்.
இதே காலப்பகுதியில், சந்தேகத்தின் பேரில் சுமார் 4,686 பெண்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 38 பெண்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


