தலைப்புச் செய்திகள்

அரச இல்லத்தை மஹிந்த இன்னும் கையளிக்கவில்லை: நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் நளிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு அரசு வழங்கிய விஜேராம மாவத்தையிலுள்ள இல்லம் – இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டை காலி செய்து மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும், இன்னும் அதை உத்தியோகபூர்வமாக பொது நிர்வாக அமைச்சிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் விஜேராம இல்லத்தை காலி செய்தார்.