
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத – அமைப்பின் தலைவராக எம்.பி.எம். பைறூஸ், செயலாளராக எம்.எஸ்.எம். பாஹிம் மற்றும் பொருளாளராக கியாஸ் ஏ. புகாரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நேற்று (27) காலை நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் தெரிவாகினர். அவர்களின் விவரம் வருமாறு;
செயற்குழு உறுப்பினர்கள் விபரம்:
1. இர்ஷாத் ஏ. காதர்
2. யூ.எல். மப்றூக்
3. றிப்தி அலி
4. எம்.எப்.றிபாஸ்
5. ரம்ஸி குத்தூஸ்
6. அஷ்ரப் ஏ. சமத்
7. சமீஹா சமீர்
8. ஸாதிக் ஷிஹான்
9. எம்.ஏ.எம். நிலாம்
10. சிஹார் அனீஸ்
11. எம்.ஏ. ஜெம்சித் அஸீஸ்
12. எஸ்.எம். றிஸ்வான்
13. எஸ்.என்.எம். சுஹைல்
14. ஏ.எச்.எம். பௌசான்
15. ஜாவிட் முனவ்வர்


