
வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் பகிடி வதையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, குளியாப்பிட்டி நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதையின் போது உடல் ரீதியாக தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் தொடர்பாக- குளியாப்பிட்டி பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்
தற்போது வயம்ப பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டில் கற்கும் – ஹெட்டிபொல, கட்டுபொத, மரக்கவில மற்றும் உக்குவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேக நபர்களை உறுதிப்படுத்த ஆரம்ப அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


