தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி ஊடக விருதுக்கான பணப் பரிசுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ஊடக விருதை பெறுவோருக்கு வழங்கப்படும் பணத்தொகையை 01 லட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் – வாழ்நாள் விருது பெறுவோருக்கு வழங்கும் பணத்தொகையின் பெறுமதியை 04 லட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ ‘ஐனாதிபதி ஊடக விருது’ வழங்கும் வைபவம் – ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும், 2019 ஆம் ஆண்டின் பின்னர் குறித்த விருது வழங்கும் வைபவம் நடத்தப்படவில்லை.

எனவே, குறித்த விருது வழங்கும் வைபவத்தை இவ்வாண்டு தொடக்கம் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக, 2023 ஆம் ஆண்டுக்குரிய ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2025.11.11 அன்று ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவத்தை நடத்துவதற்கும். அங்கு வெற்றியாளருக்கு வழங்கப்படுகின்ற பணப்பரிசை 100,000 ரூபாய் வரையிலும், வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கும் பணப்பரிசை 400.000 ரூபாயாக அதிகரிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.