தலைப்புச் செய்திகள்

நாட்டில் இந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த விவரம் அறிவிப்பு

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 955 கிலோகிராம் ஹெராயின், 1,422 கிலோகிராம் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் உட்பட, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டவற்றில், 471 கிலோகிராம் ஹாஷிஷ், 29 கிலோகிராம் கொகெய்ன் மற்றும் 13,773 கிலோகிராம் கஞ்சா ஆகியவையும் அடங்கும். மேலதிகமாக 3.5 மில்லியன் போதை மாத்திரைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது, ​​ரி56 தாக்குதல் துப்பாக்கிகள் 61 மற்றும் 62 கைத்துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 1,721 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று 920) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் உதவி அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

ஜனவரி 1, 2025 முதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 328 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். இவர்களில் 38 துப்பாக்கிதாரிகள், 27 மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததார்கள் எனும் சந்தேகத்தில் 263 நபர்கள் அடங்குவர்.