தலைப்புச் செய்திகள்

சந்தேக நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்கியதாக கூறப்படும பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை, மாத்தறை-ஹம்பாந்தோட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு சந்தேக நபரை கந்தர பொலிஸார் கைது செய்த போது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வங்கி அட்டையை – குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த சார்ஜண்ட், அட்டையின் உரிமையாளர் என்று கூறி கடைகளில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.