தலைப்புச் செய்திகள்

அரச பணம் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு: சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சருக்கு விளக்க மறியல்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ரகுபத்த, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று (18) ஆஜர் செய்யப்பட்ட போது, ஒக்டோபர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அரச நிதி சுமார் 70 மில்லியன் ரூபாயை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் அமைச்சரை குற்றப் புலனாய்வுத் தினைக்களத்தினர் கைது செய்தனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் – இவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார.