தலைப்புச் செய்திகள்

06 மாதங்களில் 18 பில்லியன் ரூபாய், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு லாபம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 06 மாதங்களில் ரூ. 18 பில்லியன் லாபமீட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களிலேயே இந்த லாபம் கிடைத்துள்ளது.

பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக, பல திட்டங்களைத் தொடங்குவதற்கு இந்த லாபம் பயன்படுத்தப்படும் என்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார கூறியுள்ளார்.

எரிபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட- முத்துரஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.