தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டிலிருந்து பாம்புளைக் கடத்தி வந்த இலங்கைப் பெண் கைது

வெளிநாட்டு பாம்பு இனங்களை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, இவர் கைதானார்.

40 வயதான பெண் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்ததார் என, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் பொருட்களை ஆராய்ந்தபோது, ​​அவருடைய பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாம்புகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.