தலைப்புச் செய்திகள்

பிரதமர் பதவியை இழக்கிறாரா ஹரினி?: ரில்வின் சில்வா விளக்கம்

ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியாகும் ஊகத்தை, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்துள்ளார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற விடயங்களைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறினார்.

“ஹரினி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று அவர்கள் கூறுகின்றனர். இது அவர்களின் கனவுகளைத் தவிர வேறில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.