தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை, தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரசாயனப் பொருட்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மித்தெனிய – தலாவ பகுதியில் உள்ள இடமொன்றில் மேற்படி ரசாயனம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை இன்று (07) காலை ஆஜர்படுத்திய போது, மேற்படி தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டது.

‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனங்கள் மித்தெனியவில் மீட்கப்பட்டது. அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் பியல் மனம்பேரி இது தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

மித்தெனிய – தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில்’ஐஸ்’ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்களை புதைக்கப்ட்ட நிலையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். செப்டம்பர் (05) அன்று மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது, இவை கைப்பற்றப்பட்டன.

பியல் மனம்பேரி மற்றும் அவருடை சகோதரர் சம்பத் இருவரும் ரசாயனங்களை மறைத்தார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வின் நெருங்கிய கூட்டாளிகளாவர்.

இந்தோனேசியாவில் கெஹல்பத்தரன பத்மேயுடன் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’தான் – ‘ஐஸ்’ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.