தலைப்புச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு

கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலக நபர்களும் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு ஆகியவை, 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் – சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி, இலங்கையைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஐவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் நேற்று (30) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாதாள உலக நபர்களான ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சாலிந்த’ மற்றும் ‘பாணதுர நிலங்கா’ ஆகியோர் – மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ‘பேக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோர் விசாரணைக்காக மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் போலி படம்: சிஐடி விசாரணை ஆரம்பம்