தலைப்புச் செய்திகள்

கோட்டா, சமன் ஏக்கநாயக்கவுக்கு சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு தனித்தனி வழக்குகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா மிரர் தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலில் நடந்த ‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை குறித்து – முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில், சமன் ஏக்கநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்துக்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு சமன் ஏக்கநாயக்க நாளை சிஐடியில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து மேலும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஸ்ரீலங்க மிரர் குறிப்பிட்டுள்ளது.