தலைப்புச் செய்திகள்

கெஹல்பத்தரே பத்மே பதாள குழுவினர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பதாள உலக உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர் நேற்று முன்தினம் (28) இலங்கை பாதுகாப்ப உத்தியோகத்தரகள் இந்தோனேசியாவில் கைது செய்தனர்.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும், குழந்தையும் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

‘கெஹல்பத்தர பத்மே’ எனப்படும் மண்டினு பத்மசிறி மற்றும் ‘கமாண்டோ சாலிந்த’, ‘பெக்கோ சமன்’, ‘தெம்பிலி லஹிரு’ மற்றும் குடு நிலந்த என்ற புனைப்பெயர்களால் அறியப்படும் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசிய பொலிஸாருடன் இணைந்து, இன்டர்போல் உதவியுடன், இலங்கை பொலிஸ் விசேட குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.