தலைப்புச் செய்திகள்

ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்த பொருளை பணம் செலுத்தாமல் எடுத்துக் கொண்டு ஓடியவர் கைது

– தில்சாத் பர்வீஸ் –

ஒன்லைன் ஊடாக ‘ஓடர்’ செய்த பொருளைப் பெற்றுக் கொண்டு, பணம் வழங்காமல் தப்பியோடிய இளைஞர் ஒருவர் சம்மாந்துறையில் கைதானார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் – இளைஞர் ஒருவர் ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்த பொருளைப் பெற்றுக் கொண்டு, அதற்காக பணம் வழங்காமல் தப்பியோடிய சம்பவம் நேற்று முன்தினம் (20) நடந்தது.

இது தொடர்பில் குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் மேற்பார்வையில், பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு – நேற்று (21) வியாழக்கிழமை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

மேற்படி இளைஞனிடமிருந்து ஒன்லைன் ஊடாக பெற்றுக் கொண்டு – பணம் வழங்காமல் எடுத்துச் சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (22) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.