
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி – நாடு திரும்புவதற்கு வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை, தீயணைப்புப் படையினருடன் பொலிஸார் இணைந்து, மின்சாரக் கம்பத்திலிருந்து கீழிறக்கி, கைவிலங்கு அணிவித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், தனது மூன்று குழந்தைகள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறிய அந்த நபர், தன்னுடைய குழந்தைகளுக்காக தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வருமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார்.



