தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தும் காலம் தொடர்பில் அரசாங்கம் தகவல்

மாகாண சபைத் தேர்தலை – அடுத்த ஆண்டின் முதல் 06 மாதங்களுக்குள் நடத்த அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

2024இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்ததையும், இவ்வருடம் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெற்றமையினையும் நினைவுபடுத்திய, அவர் 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக, ஊடகங்களிடம் கூறினார்.

இது தொடர்பாக சில சட்டத் தடைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவற்றைத் தீர்க்க முடியும் என்றார்.

அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்பு – மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்த நாங்கள் நடத்துவோம். அதன் பிறகு அரசியலமைப்புத் திருத்தத்திற்குரிய – விரிவான அரசியல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.