தலைப்புச் செய்திகள்

சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 68 பேர் பலி

AI உருவாக்கிய கற்பனைப் படம்

புலம்பெயரும் நோக்குடன் சட்டவிரோத கடற் பயணத்தை மேற்கொண்ட 150 பேரில், 68 பேர், படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக ஏமன் கடற் பகுதியில் இந்த படகு கவிழ்ந்துள்ளது.

ஏமனின் தெற்கு மாகாணமான அப்யான் கடலில் கப்பல் கவிழ்ந்துள்ளது. விபத்தையடுத்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) ஏமன் தலைவர் தெரிவித்துள்ளார்.

விபத்தையடுத்து, 12 பேர் மீட்கப்பட்டதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்களில் பெரும்பாலோர் எத்தியோப்பிய நாட்டவர்கள் என்று நம்பப்படுகிறது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து வேலை தேடி – வளைகுடா அரபு நாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமன் முக்கிய கடற்வழிப் பாதையாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் கப்பல் விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பரந்த கடலோரப் பகுதியில், ஆபத்தான பாதையில் சுமார் 157 புலம்பெயர்ந்தோரை மேற்படி படகு ஏற்றிச் சென்றதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.