தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயாரத்ன 89ஆவது வயதில் மரணம்

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன தனது 89வது வயதில் இன்று (25) காலமானார். 1977ஆம் ஆண்டு அம்பாறை தொகுதியிலிருந்து அவர் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாக தெரிவானார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியலில் பிரவேசித்த தயாரத்ன, களுத்துறை மாவட்டத்தில் உள்ள கொடிகமுவ என்ற குக்கிராமத்தில் உள்ள தனது தாய்வழி மூதாதையர் வீட்டில் பிறந்தார்.

பொறியியலாளரான தயாரட்ன, அம்பாறையில் அமைந்துள்ள கல் ஓயா அபிவிருத்தித் திட்டத்தில், உதவி மின் பொறியாளராக அரச சேவையில் பணியாற்றியிருந்தார்.

1970ஆம் ஆண்டு அம்பாறை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தயாரட்ன – தோல்வியடைந்தார்.

பின்னர் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் – மீண்டும் அம்பாறை தொகுதியில் போட்டியிட்டு 8,000 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்றார்.

நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாரட்ன, பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார்.