
எண்பது (80) வயது பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, நேற்று வெள்ளிக்கிழமை (18) மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது. 1993 ஆம் ஆண்டு நடந்த கொலைக்காக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஹம்பாந்தோட்டை – மோதரபில்லு பகுதியில் ஒருவரைக் கொன்ற வழக்கில் சிறிமா எதிரிசூரியா என்ற பெண், மேலும் இருவருடன் சேர்த்து ஆரம்பத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து குறித்த பெண் மேல்முறையீடு செய்தார். இதில் கொலை செய்யப்பட்டவரின் மகள்களின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை மேல் நீதிமன்றம் சரியாக பகுப்பாய்வு செய்யத் தவறிவிட்டது என்றும், இது அவரது குற்றத்தைப் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து 32 வருட சட்டப் போராட்டத்தின் பின்னர் – குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.



