
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலகே வசந்த அல்லது அலிபேபி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிகெபொல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக இவர் பதவி வகித்தார்.
எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2012 ஆம் ஆண்டு வெலிகெபொல – ஹட்டங்கல பகுதியில் ஒருவரைக் கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வசந்த குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.



