தலைப்புச் செய்திகள்

06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு

சிறுபோக அறுவடையிலிருந்து இந்த வருடம் 600,000 கிலோகிராம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வடக்கு மற்றும் புத்தளம் மாவட்டத்திலிருந்தும் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள நெல் களஞ்சியசாலைகளும் கொள்வனவுக்காக திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய், சம்பா125 ரூபாய் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோகிராம்132 ரூபாய் என்ற விலைகளில் கொள்முதல் செய்யும் உத்தரவாத விலை திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக கடந்த வரவு – அசலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.