தலைப்புச் செய்திகள்

05 ஆயிரம் பேரை பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு சேர்க்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, 5,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக ஆட்சேர்க்கும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று – பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 28,000 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

சுமார் 1,500 உயர் தர அதிகாரிகள் உட்பட 5,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.