
பொலிஸ் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராகவும், ஊடகப் பேச்சாளராகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் ஊடகப் பேச்சாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பதவி வகித்தார்.
இந்த நிலையில் பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துக்கிணங் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



