தலைப்புச் செய்திகள்

இரண்டு மாதங்களில் 1758 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்பு

நாட்டிற்குள் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்த முயன்ற பல நாள் மீன்பிடி படகுகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் போது, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம் 1,758 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனைகளில் இந்த பெரிய அளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

அதே இரண்டு மாத காலப்பகுதியில் இந்தக் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் சுமார் 10.84 பில்லியன் ரூபாய் (1084 கோடி) எனவும், ஐஸ் கிட்டத்தட்ட 12.16 பில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.