தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை இதுவரையில் கைப்பற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையிலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது.

மேற்படி இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொடக்க அமர்வுகள் இன்று (24) நடைபெற்றபோது, இடம்பெற்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.