
ஈரானின் – ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி நிலத்தடி அணு நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில், லொறிகள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அசாதாரண செயல்பாடுகள் நடந்ததை, ஜூன் 19 மற்றும் ஜூன் 20ஆம் திகதிகளில்எடுக்கப்பட்ட உயர்தர செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அணு சக்தி நிலையத்தின் சுரங்கப்பாதை நுழைவாயிலுக்கு செல்லும் சாலையில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொரிகளை, அந்த செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த லொகளில் பெரும்பாலானவை – பின்னர் அணுசக்தி நிலையத்துக்குச் செல்லும் வீதியிருந்து சுமார் 1 கிமீ வடமேற்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மக்ஸர் எடுத்த குறித்த செய்மதி காட்சிகள் – அணுசக்தி தளத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், அதிகளவு லொரிகள் மற்றும் பல புல்டோசர்களையும் காட்டுகின்றன. இதில், அணுசக்தி நிலையத்தின் பிரதான சுரங்கப்பாதை நுழைவாயிலுக்கு, நேரடியாக அருகில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு லொரியும் அடங்கும்.
ஈரானின் ஃபொடோவ் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது இன்று அமெரிக்கா தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஆயினும், தாக்குதலுக்கு முன்பாகவே, அணுசக்தி நிலையங்களிலிருந்து செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை இடம்மாற்றி விட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அதனை உண்மைப்படுத்தும் வகையில் மேற்படி செயற்கைக் கோள் படங்கள் அமைந்துள்ளன.



