
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஐ.நாடுகள் சபைக்கான ஈரான் பணியகம் கோரியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை “அப்பட்டமான மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு” என்று விவரித்த ஈரான், அதை மிகவும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
“இந்தக் கொடூரமான குற்றங்களைச் செய்தவர் முழுமையாகப் பொறுப்பேற்கப்படுவதற்கும் தண்டனையிலிருந்து தப்பிக்காமல் இருப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் சபையின் பொறுப்புகளின் கட்டமைப்பிற்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்” என்றும் ஈரான் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.



