தலைப்புச் செய்திகள்

வீதிகளில் பிச்சை எடுத்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21 சிறுவர்கள் கைது

வீதிகளில் பிச்சை எடுத்து பொருட்களை விற்பனை செய்து வந்த 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக தலைமையகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தெருவில் பிச்சை எடுப்பதிலும், வீதிகளில் பொருட்களை விற்பனை செய்வதிலும் ஈடுபடும் சிறார்களைக் கண்டறிந்து மீட்பதும், அவர்களை தகுந்த பாதுகாப்பு காவலில் வைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அனுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் போக்குவரத்து சந்திகள் உள்ளிட்ட இடங்களில் – இவ்வாறான நடவடிக்கைகள் இருப்பதால் இந்தப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மொத்தம் 21 சிறுவர்கள் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பது இதன்போது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் காவலில் எடுக்கப்பட்ட தோடு, அவர்களை பொருத்தமான சிறுவர் பாதுகாப்பு சேவைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.