தலைப்புச் செய்திகள்

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்ட அடுத்து, ஜனவரி தொடக்கம் 73 ஆயிரத்துக்கும் அதிக வாகனங்கள் பதிவு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து – இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், அவை 58,947 பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க கூறியுள்ளார்.

மேலும் 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் நடந்ததாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டினார்.