
தன்னை வெள்ளை மாளிகையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஈரானிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக, டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.
“வெள்ளை மாளிகையின் வாயில்களில் முணுமுணுக்க, எந்த ஈரானிய அதிகாரியும் இதுவரை கேட்டதில்லை. அவரின் பொய்களை விட வெறுக்கத்தக்க ஒரே விஷயம் ஈரானின் உச்ச தலைவரை ‘வெளியேற்றுவதாக’ அவர் கோழைத்தனமாக அச்சுறுத்துவதுதான்” என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம், X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக தன்னை அணுகியதாக, டிரம்ப் கூறிய சிறிது நேரத்திலேயே இந்த கருத்து வெளியாகியுள்ளது.
“ஈரான் வற்புறுத்தலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தாது, வற்புறுத்தலின் கீழ் அமைதியை ஏற்றுக்கொள்ளாது, நிச்சயமாக ஒரு போர் வெறியருடன் இணக்கமாக ஒட்டிக்கொண்டிருக்காது,” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஈரானியர்கள் ‘அச்சுறுத்தலின் மொழிக்கு நன்றாக பதிலளிப்பதில்லை’ என்று ஆயத்துல்லா அலி கமெய்னி முன்னர் கூறிய கருத்தையும், அந்தப் பதிவு நினைவுபடுத்தியுள்ளது.



