தலைப்புச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரின் மூன்று நோக்கங்கள் குறித்து, இஸ்ரேல் பிரதமர் விபரிப்பு

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் மூலம், இஸ்ரேல் – ‘மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றுகிறது’ என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானில் தீவிர மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் “மூன்று முக்கிய நோக்கங்களைத் தொடர்கிறது. அணுசக்தி திட்டத்தை ஒழித்தல், பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி திறனை ஒழித்தல் மற்றும் பயங்கரவாத அச்சை ஒழித்தல்” என்று தெரிவித்துள்ள அவர் – மத்திய கிழக்கில் ஈரானிய ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

“இந்த இலக்குகளை அடைய தேவையானதை நாங்கள் செய்வோம். நாங்கள் அமெரிக்காவுடன் நன்கு ஒருங்கிணைந்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானிய உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னியைக் கொல்வதையும் அவர் நிராகரிக்கவில்லை.

இஸ்ரேலிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஏற்படும் ‘இருப்பு’ அச்சுறுத்தல்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.