தலைப்புச் செய்திகள்

மருந்துத் தட்டுப்பாடு குறித்து சுகாதார பிரதி அமைச்சர் விளக்கம்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் போன்ற – வழக்கமான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறை இல்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சில மருந்துகள் விநியோகத்தில் சில இடையூறுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இது சமீபத்திய பிரச்சினை அல்ல என்றும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை எனவும் டொக்டர் விஜேமுனி மேலும் குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்குள் மருந்து பற்றாக்குறையை முழுமையாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த சூழ்நிலையை – ஊடக விளம்பரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.