
இந்தியா – அகமதாபாத் விமான விபத்தில் பயணியொருவர் ஆச்சரியமான வகையில் உயிர் பிழைத்துள்ளார். இதனை அகமதாபாத் பொலிஸ் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் உயிர் பிழைத்தவர் விமானத்தன் 11A இருக்கையில் பணித்த விஸ்வாஸ் குமார் என்பவராவார். இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவராவார்.
குறித்த விமானத்தில் பயணிகள் 230 பேரும், விமானப் பணியாளர்கள் 10 பேரும் விமானிகள் இருவருமான 242 பேர் பயணித்தனர்.
இவர்களில் மேற்படி நபர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: ஏர் இந்தியா விமான விபத்து: 204 சடலங்கள் மீட்பு



